Wednesday, 26 September 2012

முத்தரையர் பற்றிய திரைப்படங்கள்:

1.) விவசாயி மகன்:
கதாநாயகன் நடிகர் ராமராஜன். படத்தில் ஹீரோவின் அண்ணன் பெயர் வீரமுத்து. இது அம்பலகாரர்களைப் பற்றியது. சில இடங்களில்  அம்பலகாரர் என்ற சொல் வரும். வீரமுத்தரையர் என்பதன் சுருக்கமே வீரமுத்து. இது நம்மால் மட்டுமே பயன்படுத்தப்படும் பெயர். அடித்துக் கூறலாம் இது நம்மைப் பற்றிய படமே என.

2.) Unkown Film Name:
ஹீரோ முரளி. ரேவதி, வடிவுக்கரசி போன்றோர் நடித்தது. இதில் அம்பலகாரர்(ஊரின் அம்பலம்) வில்லனாக இருப்பார். இதில் அம்பலத்தின் அதிகாரங்கள் விரிவாக காட்டப்படிருக்கும். Yarukkavathu padam per therinja sollunga!

3.) பொன்மனச் செம்மல், ஆறிலிருந்து அறுபது வரை - இது FACEBOOK'ல சொன்னது. உண்மையா என்னனு எனக்கு தெரியல. இது மட்டுமின்றி இன்னும் சில படங்கள் இருப்பது நமக்கு தெரிவதில்லை.

இன்னும் நம்ம கதைய திருடி பலபேர் படமா எடுத்துட்டாங்க. நமக்கும் இது தெரிவதில்லை. எப்படியோ நம்மைப் பற்றியும் சில படங்கள் உண்டென்பது நிச்சயம்.

இவைகள் வெய்ட்டான கதைகள் அல்ல. பாடல்களில் சாதி பெயர் வருவதில்லை. இதுவே இவை பிரபலம் இல்லாமைக்கு காரணம்.

Sunday, 2 September 2012

சோழர்களுடைய வாழ்வு நம்முடைய வாழ்விலிருந்துதானே தொடங்கியது:

வேங்கையின் மைந்தன் (புதினம்) கதையிலிருந்து “சோழர்களுடைய வாழ்வு நம்முடைய வாழ்விலிருந்துதானே தொடங்கியது" :

திலகவதி, வீரமல்லன்(MUTHARAIYAR KULA KATHAAPATHIRAM) அருகில் மிகவும் நெருங்கி வந்து அவன் காதோடு கூறினாள். “பாண்டியர்களுடைய மணிமுடி ரோகணத்தில்(ILANGAI THESAM) இருக்கிறதல்லவா? அதை எடுத்துக் கொண்டுவந்து, தமது புதல்வர்களில் ஒருவனைப் பாண்டிய நாட்டின் அரசனாக்கி, அவனுக்கு அதைச் சூட்டிவிடப் பார்க்கிறார். சக்கரவர்த்தியால்(RAJENDRA CHOLA-I) முடியை ரோகணத்திலிருந்து கொண்டுவரவும் முடியாது. அப்படியே கொண்டு வந்தாலும், அது இவர்கள் எழுப்பும் புது மாளிகைக்குள் போய்ச் சேரவும் சேராது."

“ஏன் சேராது? மாளிகையின் நுழைவாயிலுக்குள் போக முடியாத
அத்தனை பெரிய மணிமுடியா அது?”

“தலையிலே சூட்டிக்கொள்கிற முடி எங்கேயாவது அத்தனை பெரியதாக இருக்கமுடியுமா? ஏன் உங்கள் [MUTHARAIYAR], பரம்பரையில் யாருமே முடிசூடி நாடாண்டதில்லையோ?”

“நம்முடைய பரம்பரை என்று சொல். நானும் முத்தரையன்” என்றான் கொதிப்புடன் வீரமல்லன். “சோழர்களுடைய வாழ்வு நம்முடைய வாழ்விலிருந்துதானே தொடங்கியது. சந்திரலேகையிலும், தஞ்சையிலும், இன்னும் எத்தனையோ இடங்களிலும் நாம் நாடாண்டவர்கள் தாமே!”

வீரமல்லனின் முகத்தில் திடீரென்று கோபச் சிவப் பேறியதைக் கண்டு துணுக்குற்றாள் திலகவதி.

“பொறுத்துக் கொள்ளுங்கள்! பெரிய மாளிகையைத் தரைமட்டமாக்கி
அதை மண்மேடாக்கப் போகிறார்கள் நம்மவர்கள். மணிமுடியும் நமக்குத்தான் கிடைக்கப் போகிறது. அந்தப் போரில் நீங்களும் கலந்து கொள்ளலாம்.”

வீரமல்லன் யோசனையில் ஆழ்ந்தான். நேரம் சென்றது.

“சரி. நான் மற்றொரு நாள் இதே கச்சைகளுடன் வருகிறேன். உன்
தந்தையாரிடம் நான் வந்ததைத் தெரிவிக்க வேண்டாம். இப்போதைக்கு
உனக்குப் பிடித்த ஒரு துணியைப் பொறுக்கி எடுத்துக்கொள். என்னுடைய அன்புக் காணிக்கையாக அது இருக்கட்டும்.”

மறுக்க மனமில்லாமல் ஒன்றை எடுத்துக்கொண்டாள் திலகவதி.
“மற்றொரு நாள் என்ன! நாளைக்கே வந்து சேருங்கள்; தந்தையார்
உங்களைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்.”

மூட்டையைக் கட்டிக் கொண்டு வெளியில் வந்த வீரமல்லன் குதிரையின் குளம்பொலி கேட்டு அப்படியே திகைத்து நின்றான். “திலகவதி! நீ எடுத்துக்கொண்ட துணியை விரைந்து சென்று மறைத்து வை. உன் தந்தையார் வந்துவிட்டார்.”

பெரும்பிடுகு முத்தரையரின் குதிரை நாலுகால் பாய்ச்சலில் வீரமல்லனை நோக்கித் தாவி வந்தது. கையிலிருந்த மூட்டை நழுவி விழவே, அதைக் குனிந்து எடுக்கப் போனான் வீரமல்லன்.

IYHU RAJENDRA CHOLAN KAALATHIL NADANTHATHU. ITHIL VARUM VEERAMALLANUM, PERUMBIDUGU MUTHARAIYARUM VALNTHATHU UNMAIYA? ALLATHU KARPANAIYA? THERINTHAVARGAL KOORAVUM...

Saturday, 1 September 2012

முத்தரைய மன்னர்களின் சரித்திரச் சுறுக்கம்

முத்தரையர்கள் (சு.கி.பி. 650- சு.கி.பி. 860)

குறுநில மன்னருள் தலைசிறந்து விளங்கியவர்கள் முத்தரையர்கள். முத்தரையர்கள், களப்பிர குலத்தைச் சார்ந்தவர்களெனச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அதற்குப் போதிய சான்றுகள் இல்லை. அவர்கள் பல்லவப் பேரரசுக்கு உட்பட்டுத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பழைய புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகிய நிலப்பகுதியை ஆண்டுவந்தனர். திருக்காட்டுப்பள்ளிக்கு அண்மையில் இப்போது ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கும் செந்தலை என்பது முத்தரையர் ஆட்சியில் சந்திரலேகா என்ற அழகிய பெயரில் அவர்களுடைய தலைநகராகச் செயல்பட்டு வந்தது. பாண்டியரோடும் சோழரோடும் பல்லவர்கள் போர் புரிந்த போதெல்லாம் முத்தரையர்கள் பல்லவருக்குத் துணைநின்று வெற்றிகாண உதவியுள்ளனர்.

முத்தரையருள் முதன்முதல் கல்வெட்டுகளில் நாம் அறிந்து கொள்ளும் குறுநில மன்னன் பெரும்பிடுகு முத்தரையன் என்பான் ஆவான். செந்தலைக் கல்வெட்டில் இவன் பெயர் காணப்படுகின்றது. இவன் கி.பி. 655-680 ஆண்டுகளில் வாழ்ந்திருந்தவன்; முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தவன். இவனையடுத்து இவன் மகன் இளங்கோவடியரையன் என்கிற மாறன் பரமேசுவரன் (கி.பி. 680-சு. 705) என்பவனும், அவனையடுத்து அவன் மகன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் என்கின்ற சுவரன் மாறன் (சு.கி.பி.705-சு. 745) என்பவனும் அரியணை ஏறினர். சுவரன்மாறன் இரண்டாம் பரமேசுவரன், இரண்டாம் நந்திவர்மன் காலத்தவன்; பிந்திய பல்லவ மன்னனுடன் நட்புப் பூண்டிருந்து அவனுக்குப் பெருந்துணையாக நடந்து கொண்டான். பாண்டியன் முதலாம் இராசசிம்மன் இரண்டாம் நந்திவர்மனைத் தாக்கிப் பல இடங்களில் போர் தொடுத்து நெருக்கிக் கொண்டிருந்தபோது பல்லவ மன்னனின் படைத்தலைவனான புகழ்பெற்ற உதயசந்திரன் பல்லவனுக்குத் துணையாகப் போரில் நுழைந்து அவனைக் கடும் முற்றுகை ஒன்றினின்றும் விடுவித்ததுமன்றி மேலைச் சளுக்கரையும் தொண்டை மண்டலத்தை விட்டு விரட்டினான்.

இந்த நெருக்கடியில் சுவரன்மாறன் முத்தரையன் பல்லவனுக்கு ஆற்றிய பணி மிகப் பெரிதாகும். அவன் பாண்டியரையும் சேரரையும் கொடும்பாளூர், மணலூர், திங்களூர், காந்தளூர், அழுந்தியூர், காரை, மறங்கூர், அண்ணல்வாயில், செம்பொன் மாறி, வெங்கோடல், புகலி, கண்ணனூர் ஆகிய இடங்களில் போரிட்டு வென்றான் என்று செந்தலைக் கல்வெட்டுக் கூறுகின்றது. வேள்விக்குடிச் செப்பேடுகள் இவற்றுள் கொடும்பாளூர்ப் போர் ஒன்றினையே குறிப்பிடுகின்றன; அதிலும் அப்போரில் பாண்டியனே வெற்றி கொண்டதாகவும் கூறுகின்றன. எனினும், போர் நடந்ததற்குச் சான்று ஒன்று உள்ளதால் முத்தரையன் ஏதேனும் ஒரு போரில் வெற்றி கண்டிருப்பான் என்பதில் ஐயமில்லை.சுவரன்மாறனுக்குச் சத்துருகேசரி, அபிமானதீரன், கள்வர்கள்வன், அதிசாகசன், ஸ்ரீதமராலயன், நெடுமாறன், வேள்மாறன் முதலிய விருதுப் பெயர்கள் உண்டு.

சுவரன்மாறனை அடுத்து விடேல் விடுகு விழுப்பேரடி அரசன் என்ற சாத்தன்மாறன் (சு.கி.பி. 745-சு.770) முடிசூட்டிக் கொண்டான். இவன் சுவரன்மாறனின் மகன் என்று கொள்ளுவதற்குச் சான்றுகள் உள்ளன. பல்லவ மன்னரும் ‘விடேல் விடுகு’ என்ற விருதைத் தாங்கி வந்திருப்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். இம் முத்தரையன் காலத்தில் நெடுஞ்சடையன் பராந்தகன் என்ற பாண்டிய மன்னன் பெண்ணாகடத்தில் பல்லவரை முறியடித்துச் சோழர்மேல் பெரும் வெற்றியொன்றைக் கொண்டான். இப்போரில் முத்தரையர்கள் பங்கு கொண்டதும் கொள்ளாததும் விளங்கவில்லை.

அடுத்துப் பட்டத்துக்கு வந்தவன் மார்ப்பிடுகு பேரடியரையன் (சு.கி.பி.770-791) என்பான். இவன் விடேல்விடுகு விழுப்பேரடி முத்தரையனுடன் எவ்வகையான உறவு பூண்டவன் என்பது தெரியவில்லை. இவன் நந்திவர்ம பல்லவனின் உடன் காலத்தவன். இவன் ஆட்சியின்போது பாண்டியன் நெடுஞ்சடையன் இரண்டாம் முறையும் சோழ நாட்டின்மேல் படையெடுத்துவந்து ஆயிரவேலி, அயிரூர், புகழியூர் என்ற இடங்களில் கொங்கு மன்னன்மேல் வெற்றி கொண்டான். இப்போர்களில் கொங்கு மன்னனுக்குப் பல்லவரும், சேர மன்னரும் துணை நின்றனர். பல்லவர் தோல்வியுற்றுத் தம் காவிரிக்கரை நாடுகளை இழந்தனர். இப் போர்களில் இம்முத்தரைய மன்னன் கலந்துகொண்டதும், கொள்ளாததும் தெரியவில்லை. ஆலம்பாக்கத்தில் ‘மார்ப்பிடுகு ஏரி’யைக் கட்டினவனும், திருவெள்ளறையில் ‘மார்ப்பிடுகு பெருங்கிணறு’ தோண்டியவனும் இவனேயாவான்.

மார்ப்பிடுகு முத்தரையனையடுத்து விடேல்விடுகு முத்தரையன் குவாவன்சாத்தன் (சு.கி.பி. 791-826) பட்டமேற்றான். இவன் பாண்டியனின் மேலாட்சிக்குட்பட்டிருந்தவன் என மாறன் சடையனின் செந்தலைக் கல்வெட்டினின்றும்13 ஊகிக்கலாம். பாண்டியர் நெடுநாள் காவிரிக்கரையில் ஆட்சி புரியவில்லை. அதைவிட்டு அவர்கள் விலகிய பிறகு முத்தரையர் முழு உரிமையுடன் அரசாளத் தொடங்கினர்.

விடேல்விடுகு முத்தரையன் குவாவன்சாத்தன் மகன் சாத்தன் பழியிலி என்பான் (சு. கி. பி. 826-851) தன் தந்தைக்குப் பிறகு அரசு கட்டில் ஏறினான். இவன் கற்றளி ஒன்று குடைவித்தான் என்று நார்த்தாமலைக் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. சாத்தன் பழியிலிக்குப் பெரும்பிடுகு, விடேல்விடுகு, மார்ப்பிடுகு போன்ற விருதுகள் அக் கல்வெட்டில் காணப்படவில்லை. எனவே, சாத்தன் பழியிலி பல்லவரின் மேலாட்சியினின்றும் விடுதலை வெற்றிருக்க வேண்டும் என்று ஊகிக்க இடமேற்படுகின்றது. இவனுடைய ஆட்சியில்தான் சோழ மன்னன் விசயாலயன் தஞ்சையை முத்தரையரின் பிடியினின்றும் விடுவித்துக் கொண்டான். பல்லவர்கள் அப்போது முத்தரையருக்குத் துணைநின்றதாகச் சான்றுகள் இல.

புதுக்கோட்டைப் பகுதியில் நிருபதுங்க பல்லவன் தன் ஆட்சியை விரிவுபடுத்தியபோது மீண்டும் வழக்கம்போல் முத்தரையர் பல்லவருக்குத்தாழ்ந்து வந்திருந்தனர். மெல்ல மெல்லச் சோழர் புதுக்கோட்டைப் பகுதியின்மேல் தம் செல்வாக்கைச் செலுத்தலானார்கள்; நார்த்தாமலையில் விசயாலய சோழீசுவரம் என்ற சிவன் கோயில் ஒன்றை எழுப்பினர். முதலாம் ஆதித்த சோழன் கொடும்பாளூர்க் குறுநில மன்னரிடம் பெண்கொண்டான். திருப்புறம்பயம் போருக்குப் பிறகு பாண்டியரின் செல்வாக்குக் குன்றிவந்தது. எனவே, முத்தரையர் சோழருடைய மேலாட்சிக்குத் தலைகுனியலானார்கள் என்று கொள்ளலாம். களப்பிரரைத் தொடர்ந்து முத்தரையர் சோழப் பேரரசு ஒன்று வளர்வதற்குப் பெருந் தடையாக இருந்து வந்தனர். அவ்வப்போது பல்லவர், சோழர், பாண்டியர் ஆகியவர்களுடன் மாறி மாறிக் கூட்டுறவு மேற்கொண்டதாலும், தனித்து நின்று தமக்கெனச் சுதந்தர உரிமைகள் தேடிக் கொள்ளாததாலும் முத்தரையரின் கை சாய்ந்துவந்தது. முத்தரையர் சோழரிடம் தோல்வியுற்றுத் தஞ்சையைக் கைவிட்டதும் பல்லவருக்கும் சோழருக்கும் இடையே இருந்த தடைகள் நீங்கின; சோழர்கள் பல்லவரின் மேல் நேருக்கு நேர் பகை நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதற்கு வாய்ப்பும் ஏற்றங்கண்டது.

முத்தரையர் சைவ, வைணவ சமய வளர்ச்சிக்கு உதவிவந்தனராயினும் சமண சமயத்துக்கும் பேராதரவு காட்டி வந்தனர். முத்தரையர் காலத்தில் இயற்றப்பட்ட நாலடியார் நூலில் காணப்படும் குறிப்புகள் இதனைத் தெரிவிக்கின்றன. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் முத்தரையர் துணை புரிந்து வந்தனர். அவர்களுடைய அரசவையில் பல தமிழ்ப் புலவர்கள் அமர்ந்திருந்தனர். பாச்சில்வேள் நம்பன், ஆசாரியர் அநிருத்தர், கோட்டாற்று இளம்பெருமானார், பவடாயமங்கலம் அமருந்நிலை என்பார் அவர்களுள் சிலர். இப் புலவர்களின் பாடல்கள் செந்தலையில் உள்ள சுந்தரேசுவரர் கோயில் தூண்களின்மேல் செதுக்கப்பட்டுள்ளன. இப் பாடல்கள் வெண்பா, கட்டளைக் கலித்துறைச் சீர்களில் இயற்றப்பட்டுள்ளன. அமிதசாகரர் இயற்றிய யாப்பருங்கலவிருத்தியில் (கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதி) தமிழ் ‘முத்தரையர் கோவை’ என்னும் நூலைப் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. அந்நூல் இப்போது கிடைக்கவில்லை.

முத்தரையர்கள் கோயில் கட்டுவதிலும், கற்றளிகள் குடைவதிலும் தம் நோக்கத்தைச் செலுத்திவந்தனர். சாத்தன் பழியிலி என்ற முத்தரைய மன்னன் பழியிலீசுவரம் குடைவித்தான். அவனுடைய மகள் அதற்கு முகமண்டபம், பலிபீடம், நந்தி இடபமண்டபம் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்தாள். திருமயம் தாலூக்காவில் பூவனைக்குடி என்ற இடத்தில் குடையப்பட்டுள்ள புஷ்பவனேசுரர் கோயில் பூதி களரி அமரூன்றி முத்தரையன் அமைத்ததாகும். தேவர்மலைக் கற்றளியும் முத்தரையர் செதுக்கியதே எனக் கருதுவர்.

வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவன்

தென்பாண்டி முத்தரையன்:  செல்வகுமார் முத்துராஜா





.

தமிழக மீனவர்கள் வஞ்சிக்கப்பட்ட கடற்கரைச் சமூகம்?


கடலும், கடல் சார் வாழ்வுமே மீனவர்களின் உயிர்வாழ்வில் தங்கி நிற்கிறது. உலகமயமாக்கலின் பின்விளைவுகளாய் மீனவப் பழங்குடிகள் இன்று கடற்புரங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு சமவெளிப் பகுதிகளுக்குள் வீசப்படுகிறார்கள். தண்ணீரில் இருந்து எடுத்து வீசப்படும் மீன் குஞ்சுகள் மூச்சு திணறிச் சாவது போல அவர்கள் வேர்களை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறார்கள். சுற்றுலா வளர்ச்சியின் பெயராலும், கடற்கரை மேலாண்மைத் திட்டத்தின் பெயராலும், பன்னாட்டு ஏகபோக மீன்பிடி உரிமையாலும் அவர்களின் வாழ்வு நசுங்கி நாசமாகிறது. பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரியின் கேரள எல்லையான நீரோடி வரை சுமார் 1,062 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிழக்கு கடற்கரையோரமாக வாழும் இம்மக்கள் வங்காள விரிகுடாவையும், அரபிக்கடலையும் அண்டி வாழ்கிறார்கள். புவியியல் ரீதியாக ஒரமாக ஒடுக்கப்பட்டு சமவெளிச் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட இம்மக்கள் தமிழக அரசியலில் தீர்க்கமான சக்திகளாகவோ செல்வாக்கு செலுத்தும் சக்திகளாகவோ வளரவில்லை. வளர அனுமதிக்கப்பட்டதும் இல்லை
.
பழவேற்காடு, சென்னை, மாமல்லபுரம், கடலூர், பாண்டிச்சேரி, சிதம்பரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, இராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என இந்துக் கதையாடலில் புனிதத் தல ஒளிவட்டங்கள் இவ்வூர்களுக்கு இருந்தாலும் கூட இந்த நகரங்களின் பூர்வகுடிகள் மீனவப் பழங்குடிகளே. சென்னையின் வயது 300 என்கிறார்கள். அப்படியானால் அதற்கு முன் சென்னைக்கு வரலாறே கிடையாதா? பெரும் கோடீஸ்வரப் பண்ணைகளின் சொர்க்கமாகிப் போன சென்னையின் வயது 300 என்றால் அதன் அர்த்தம் என்ன? உங்கள் பாட்டனும் முப்பாட்டனும் வருவதற்கு முன்னால் சென்னை ஒரு மீனவ கிராமம். காலமாற்றத்தில் அது செயற்கைத் துறைமுக நகரமாக மாறிப் போனதோடு. வலைகள் காய்வதாலும், மீன்கள் கருவாடாக மாறுவதாலும் மெரீனாவின் அழகு கெடுகிறது என்று மீனவர்களைச் சுட்டுக் கொன்ற வரலாறுகள் கூட உண்டு. எழில் மிகு சென்னையின் அழகிற்குப் பின்னால் இரத்தம் தோய்ந்த மீனவர்களின் அழுகுரல் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை வாழ்கிற மீனவ மக்களில்  பட்டினவர், பரதவர், முக்குவர் என பாரம்பரியமாக கடலை நம்பி வாழ்கிற மீனவர்கள் அதிகமாக உள்ளனர். தவிர மரக்காயர், முத்தரையர், கரையர், கடையர் போன்ற பாரம்பரிய மீன்பிடி சமூகங்களும் தமிழகக் கடற்கரை பிரதேசங்களில் வாழ்கின்றனர். சென்னைக்கு வந்த பண்ணைகள் எப்படி பூர்வீக மீனவர்களை அப்புறப்படுத்தி சென்னையை அழகுபடுத்திக்(?) கொண்டார்களோ அது போலவே, இராமேஸ்வரமும் பாரம்பரிய மீனவர்கள் துரத்தப்பட்ட ஒரு தீவாக மாறிவிட்டது. அங்கே இன்று செல்வாக்கு செலுத்துகிறவர்கள் முக்குலத்தோர். இராமநாதஸ்வாமி கோவிலை முன்வைத்து இந்து மதவெறிக் கும்பல்களான ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற இந்துப் பாசிஸ்டுகள் இவ்வூர்களில் செல்வாக்கு செலுத்துவதும் அவர்களுக்கு அடியாள் வேலை பார்ப்பதும் இதே முக்குலத்தோர்தான். அது போல பாரம்பரிய மீனவர்களின் செழிப்பான நகரமாக இருந்தது தூத்துக்குடி. இன்றைக்கு மீனவர்களை தூத்துக்குடியில் இருந்து பீஸ் பிடுங்கி வீசி எரிந்து விட்டு தூத்துக்குடி நகரமே தங்களுக்கானது என்று அதிகார பலத்தோடு அமர்ந்திருப்பது நாடார்கள். கன்னியாகுமரியிலும் இதே நிலைதான். கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திரம், பகவதியம்மன் கோவிலை மையமிட்டு எழுப்பப்பட்டிருக்கும் இந்துப் பாசிசம், திருச்செந்தூரில் முருகன் கோவிலை முன்வைத்து உள்ளது. இந்த அமைப்புகளின் அடியாட்களாக செயல்படுவதும் இதே பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள்தான். இந்தப் பகுதிகளில் எல்லாம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளை அண்டியே பாரம்பரிய மீனவர்கள் வாழ வேண்டிய நிலை. தவிரவும் தமிழகத்தில் கடற்கரையோர சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் எந்த சாதி செல்வாக்கானதோ பெரும்பான்மையானதோ அந்தச் சாதிகளைச் சார்ந்தவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தி வருகின்றன

திராவிடக் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஏனைய தேசியக் கட்சிகளும். சமவெளிச் சமூகங்களின் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிற இந்த வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் ஓட்டு மட்டும் போடும் வாக்குப் பிண்டங்களாக மட்டுமே மீனவ மக்கள் திராவிடக் கட்சிகளால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். அரசியலில் சமவெளிச் சமூகங்களின் பிரதிநிதிகளே மீனவ மக்களின் தலைவர்களாக இருக்கிறார்கள். இராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் விசைப்படகு உரிமையாளர்களாகவும் இவர்களே இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தென் தமிழக கடலோரங்கள் மட்டுமல்லாது கடற்கரை சமூகங்களில் செல்வாக்கு செலுத்தும் கிறிஸ்தவம் கூட இம்மக்களை இன்று வரை காயடித்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் பங்குப் பாதிரியார்கள் தேவாலயங்களில் குறிப்பிட்ட ஒரு திராவிடக் கட்சியின் பெயரைச் சொல்லி பகிரங்கமாகவே தேவாலயப் பூஜையில் ஓட்டு கேட்கிறார்கள். இந்தியத் திருச்சபை இந்துத் தன்மையாக மாறி காலங்கள் ஓடி விட்டாலும் உள்ளூரில் மீனவ மக்களை நசுக்குவது பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதி பாதிரியார்களே. மறைமவாட்டங்களில் மீனவ மக்களின் பங்களிப்புக்கும் வாய்ப்புகளுக்கும் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி பாதிரிகள் எதிராக இருக்கிறார்கள். தற்காலத்தில் ஒடுக்கப்பட்ட மீனவப் பாதிரிகள் விழிப்புணர்வடைந்து மறைமாவட்ட தலைமைகளில் உரிமைகள் கோரும் போது அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சாதி திருச்சபை கோட்டாறு மறைவாட்டத்தையே இரண்டாகப் பிரிக்கும் நிர்வாக முடிவை எடுத்திருக்கிறது. பாதிரியார்களுக்கே இதுதான் நிலை என்றால் உழைக்கும் மீனவ மக்களின் நிலையை நீங்கள் யோசித்துப் பாருங்கள்.

பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட சாதிகளும், ஆதிக்க சாதிகளுமே கோலோச்சும் தேசிய இயக்க, திராவிட இயக்க அரசியல் அதிகாரத்தில் மீனவர்கள் அரசியல் சக்திகளாக பலம் பெறாமல் போனதும் சமவெளிச் சமூகங்களில் இருந்து கடற்கரை மக்களுக்குள் ஊடுருவியிருக்கும் சுரண்டல் பேர்வழிகள் மீனவர்களின் உரிமை குறித்துப் பேசுவதுமே இராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்சனை ஒரு பெரிய அளவிலான மீனவர் பிரச்சனையாக வெடிக்காமல் போனதற்குக் காரணம். மீனவர் உரிமை பற்றிப் பேசுகிற இவர்கள் உண்மையான மீனவ மக்களின் வலிகளையும் வேதனைகளையும் அறியாதவர்களாக இல்லை. மாறாக காலங்காலமாக கடலில் இருந்து கொண்டு வரும் மீனுக்கு கரையில் இருந்தபடியே விலை நிர்ணயம் செய்து அதன் மூலம் கொழுத்த லாபம் பார்த்தவர்கள் இவர்கள். இன்றுவரை உடலுழைப்பில் ஈடுபடாமல் கரையில் அமர்ந்தபடியே உழைப்பைச் சுரண்டி வரும் இவர்கள் மீனவர் உரிமை தொடர்பாக பேசுவது எவ்வளவு அபத்தம்! சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் வந்தபோது, ஒரு பக்கம் சேதுக் கால்வாய் திட்டம் வந்தால் தமிழன் மல்லாக்கப் படுத்துக் கிடந்தபடியே உண்டு வாழலாம் என்றும் தமிழகம் சிங்கப்பூராக மாறிவிடும் என்றும் பேசிய மரபார்ந்த தமிழ்க் குரல் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் ராமன் பாலத்தை இடித்தால் நாடே சுடுகாடாக மாறிவிடும் என்று கூச்சலிட்ட இந்துப் பாசிசக் குரல் மறுபக்கம். ஆனால் இந்த இரண்டுக்குமிடையே மீனவர் நோக்கில் அவர்களது மரபார்ந்த மீன் பிடித் தொழிலில் இந்த சேதுக்கால்வாய் திட்டம் ஏற்படுத்தப் போகும் நாசகார அழிவு குறித்தோ, அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பவளப்பறைகள் குறித்தோ ஏன் எந்த சக்திகளும் பேசவில்லையோ, அது போலத்தான் தற்போதைய மீனவர் பிரச்சனையும்.

இலங்கை கடற்படையால் இதுவரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதே எண்ணிக்கையில் இன்னொரு ஆதிக்க சாதியில் கொலைகள் விழுந்திருக்கும் என்றால் அதை திராவிட மனமோ, தமிழ்த் தேசிய மனமோ பொறுத்துக் கொண்டிருக்குமா என்பது இங்கு ஆராயப்பட வேண்டியது.

பொதுவாக மீனவச் சமூகத்தின் வீழ்ச்சிக்கு அவர்களின் குடிப்பழக்கமே காரணம் என்று பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. மீனவர்கள் தொழில் சார் வாழ்வைக் கொண்டிருப்பதால் நிரந்தரமான குடிகாரர்களாக இயல்பாகவே வாழ முடியாது. அப்படி வாழ்ந்தால் அவர்கள் கடலில் இருந்து அந்நியப்பட நேரிடும். மாறாக கள்ளுண்ணும் பழக்கமென்பது மீனவக் குடிகளிடம் சங்ககாலம் தொடங்கியே இருந்து வந்துள்ளது. மீனவ மக்கள் குடியால் சீரழிந்தவர்கள் என்கிற சிந்தனையை உருவாக்கியதும் கிறிஸ்தவம்தான். பின்னர் சுரண்டல் நலனுக்காகவும் அதைப் பேணி வளர்த்தெடுப்பதற்காகவும் இச்சிந்தனை சமவெளி சமூக ஆதிக்க சக்திகளால் கட்டி எழுப்பப்பட்டது. இப்படிப் பேசுகிற ஒருவர் கூட ‘குடி இல்லாமல் இருந்தால் மட்டும் மீனவன் வாழ்வு மேம்பட்டிருக்கும்’ என்றோ இலங்கை கடற்படை சுடாமல் விட்டிருப்பானா என்பதையோ கேட்கத் தவறுகின்றனர். நீடித்த சுரண்டல் அடக்குமுறைக்கு இத்தகைய வசைகளும் குற்றச்சாட்டுகளும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மீது சாத்தப்படுவது பொதுப்புத்திதான்.

கடற்கரை சமூகங்கள் மீதான இந்த ஒதுக்கல் முறைதான் தமிழகத்திலிருந்து மீனவர்களுக்கான அரசியல் அழுத்தம் ஒன்று உருவாகாமல் போகக் காரணமாக இருக்கிறது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் மீனவ மக்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை. இட ஒதுக்கீடு போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக ஏற்பாடுகளில் கூட இவர்கள் ஆதிக்க சாதி பிற்படுத்தப்பட்ட மக்களுடனேயே போட்டி போட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். நீண்டகாலமாக பாரம்பரிய மீனவர்கள் பழங்குடிகள் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்று வரை கண்டுகொள்ளப்படவில்லை. இத்தகைய புறச்சூழல்களைக் களைவதில் போதிய அக்கறை காட்டாததாலும் இடதுசாரி இயக்கங்கள் கூட இம்மக்களின் அரசியல் எழுச்சிக்கு அவர்களிடம் பணி செய்யாமல் இருப்பதும், கிறிஸ்தவம் இம்மக்களை தொடர்ந்து மூடுண்ட சமூகங்களாக வைத்து சுரண்டிக் கொண்டிருப்பதுமே அவர்களை தற்கொலையான ஒரு சமூகமாக வைத்துள்ளது. இந்தப் பிரச்சனைகளை பேசாதவரை, இது குறித்து சிந்திக்காதவரை, இலங்கைக் கடற்படையின் தூண்டிலில் சிக்கிய மீன்களாக இவர்கள் இரையாவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மீனவர்களுக்காக பேசுவதைப் போன்ற பாவனைக் கோஷங்களுக்கும் குறைவிருக்காது.
thanks