இற்றைப் பிறவிக் குலங்கள்
அம்பல(க்)காரன்
தொழில் - பயிர்த்தொழிலும், ஊர்காவலும்.
பிரிவு - முத்திரியன் (முத்தரையன்), காவல்காரன், வன்னியன், வலையன் என்னும் நாலகமணப்பிரிவுகள்.
பட்டம் - சேர்வைகாரன், முத்தரையன்(முத்தரசன்), அம்பலகாரன்,மழவராயன் (மழவரையன்),வன்னியன், மூப்பன்.
முத்தரையன் (முத்திராசு, முத்திரியன்)
வேளிர் (குறுநில மன்னர்) பதவியும் விருந்தோம்பி வேளாண்மை செய்யும் இயல்புங்கொண்ட முத்தரையர் என்னும் வகுப்பார், 6ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டிலிருந்தமை,
"பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர்"
கருனைச்சோ றார்வர் கயவர்"
"நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே
செல்வரைச் சென்றிரவா தார்"
செல்வரைச் சென்றிரவா தார்"
அவர் தஞ்சைக்கும் புதுக்கோட்டைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியை ஆண்டு வந்தவர் என்பது, செந்தலைக் கல்வெட்டால் தெரிய வருகின்றது. பல்லவர் கீழ்ப்பட்டிருந்தசோழர், தஞ்சையை ஆண்டு வந்த பெரும்பிடுகுமுத்தரையனை வென்ற செய்தி, திருவாலங் காட்டுச்செப்பேட்டிற் குறிக்கப்பெற்றுள்ளது.
இன்று தஞ்சை திருச்சிராப்பள்ளிமாவட்டங்களிற் பயிர்த் தொழில் செய்து வாழும்முத்திரியர் என்பார், பண்டை முத்தரையர்வழியினரே.
தஞ்சை மாவட்டத்திலுள்ள செம்பியமுத்தரையர் என்னும் பட்டங் கொண்ட கள்ளர்வகுப்பினர், முத்தரையரின் படைமறவர்வழிவந்தவராகவே யிருத்தல் வேண்டும்.
கடைக்கழகக் காலத்திற் புல்லியும்பிற்காலத்தில் திருமங்கை யாழ்வாரும் போன்றகள்வர் கோமான்கள் பலர் இருந்தமைவெள்ளிடைமலை. ஆயின், முத்தரையர் வேளிர்மரபினர் என்பதே நடுநிலை முடிபாம்.
வலையன்
பெயர் - வலையன், வலைகாரன், வேடன்,சிவியான், குருவிக்காரன்
தொழில் - வலை வைத்துப் பறவை விலங்குபிடித்தல், ஆறு குளங்களில் மீன் பிடித்தல்.
பிரிவு - பல அகமணப் பிரிவுகள்.
தலைவன் பட்டம் - அம்பலகாரன்,கம்பளியன்.
குலப் பட்டம் - மூப்பன், சேர்வை,அம்பலகாரன், வன்னியன்.
புதுக் குலம்
வளுவாதியர் (திருச்சிராப்பள்ளி புதுக்கோட்டை வட்டார வலையருள் ஒரு பிரிவினர்.)
காந்தளூர் வரை முத்தரையன் போர்
இராசராசனின் மெய்க்கீர்த்திகள் அனைத்தும் அம்மன்னன் பெயருக்கு முன்பு ‘காந்தளூர்ச்சாலைக் கலமறுத்தருளிய’ என்னும் அடைமொழியைக் கொண்டே விளங்குகின்றன. இவ்வடைமொழிச் சொற்கள் இராசராசனின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளிலேயே காணப்படுகின்றன. அப்பேரரசன் தன் வாழ்க்கையில் பெற்ற வெற்றி இஃதே போலும். இவ் விருது எந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றது என்பதைப் பற்றி ஆய்வாளரிடையே ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.
பழங்காலந்தொட்டே காந்தளூர் என்பது சிறந்ததோர் இடமாக விளங்கிவருகின்றது. சுவரன் மாறன் என்ற முத்தரைய மன்னன் ஒருவன் காந்தளூரில் மாற்றானுடன் போராடிப் பெரு வெற்றி கண்டான் என்று செந்தலைக் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது.
இக் காந்தளூர் எனும் ஊர் தற்போதைய கேரள [அன்றைய சேர] நாட்டில் உள்ளது. இதிலிருந்து இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர், சேர நாடு வரை சென்று மகத்தான வெற்றி கண்டார் என்பதை அறியலாம்.
தஞ்சைத் தாலுகாவில் உள்ள இவ்வூர் சந்திரலேகை என்று பண்டைக் காலத்தில் பேர் பெற்றிருந்தது. இங்குள்ள சுந்தரேச்சரர் என்னும் சிவன் கோயில் வெளிக் கோபுர வாயிலின் இடதுபுறச் சுவரில் உள்ள சாசனத்தால் இங்குப் பண்டைக்காலத்தில் சமணர் இருந்த செய்தி அறியப்படும். அச் சாசனப் பகுதி இது: ‘கோப்பர கேசரி பன்மர்க்கு யாண்டு 12-வது கா...................ற்குடிப் பள்ளியுடைய ஆரம்ப வீரனேன் கையெழுத்து. வடகவிர................. பள்ளியுடைய கனகசேனபடாரர் கையால் யான் கொண்டு கடவ. மற்றொரு சாசனம், ‘நங்கை ஒளி மாதியார் தாயார் நக்க நீலி’ என்பவர் பொன் தானம் செய்ததைக் கூறுகின்றது. இவ்வூரில் இப்போது இடிந்து கிடக்கும் ஒரு கோயிலின் கற்றூண் ஒன்றில் சமண தீர்த்தங்கரரின் சிறிய திருவுருவம் இருந்ததைப் பார்த்ததாக என் நண்பர் ஒருவர் கூறுகின்றார்.
(www.tamilvu.com)
No comments:
Post a Comment